தற்போது தமிழ் மாதத்தில் ஆடி மாதம் பிறந்துள்ளதால் மக்கள் அனைவரும் தங்கள் குலதெய்வ கோவிலுக்கு சென்று பொங்கல் விட்டு நேர்த்திக் கடன் செய்து வழிபட்டு வருகிறார்கள். இந்த ஆடி மாதம் முழுக்கவே நிறைய பேர் குலதெய்வ கோவிலுக்கு சென்று பொங்கல் வைத்து பூஜை செய்து தலைமுடி காணிக்கை கொடுத்து மொட்டை அடித்துக்கொண்டு மகிழ்ச்சியுடன் வீடுத் திரும்புகிறார்கள்.
தினமும் அசைவ உணவுகள் இல்லாமல் ஆடி மாதம் செல்லாது. அப்படி இருக்கையில் ஆடு கோழி வளர்ப்பவர்கள் இந்த மாதம் முழுக்கவே கொண்டாட்டம்தான். ஜோராக வியாபாரம் பிச்சிக்கிட்டு போகும்.
அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் உழவர் சந்தையில் ஞாயிற்றுக்கிழமை தோறும் மாட்டுச் சந்தை நடைபெறும். இதில் ஆடு கோழி மாடுகள் என அதிகமாக வியாபாரத்திற்கு கொண்டு வந்து விற்கப்படுகிறது. ஆடி மாதம் பிறந்த காரணத்தினால் இந்த மாதம் முழுக்கவே வியாபாரம் சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது.
திருவண்ணாமலை உழவர் சந்தையில் திருவண்ணாமலை மக்கள் மட்டுமல்லாமல் செங்கம் சுற்று வட்டார பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்கள் நகர்புறங்களை வசிப்பவர்கள் மற்றும் வெளியூரில் இருந்து வருபவர்கள் முதலானோர் உள்பட நிறைய பேர் ஆடு கோழிகளை வாங்கி செல்கிறார்கள்.
ஆடி மாதம் முழுக்க ஒவ்வொரு நாளும் மக்கள் தங்களுக்கு குலதெய்வ கோவிலுக்கு சென்று நேர்த்திக்கடன் செய்வது மட்டுமல்லாமல் காதணி விழா நடைத்துவார்கள்.. இந்த காதணி விழாவுக்கு பிரியாணி அல்லது அசைவ உணவுகள் இல்லாமல் இருக்காது. அப்படி இருக்கும்போது அதற்கும் சேர்த்து ஆடு கோழி நிறைய வியாபாரம் நடைபெறுவதாக வியாபாரிகள் கூறுகிறார்கள்.
முக்கியமாக காதணி விழாவிற்கு நிறைய பேர் கோழிகளை தான் பிரியாணி செய்வதற்கும் கறி குழம்பு வைப்பதற்கு பயன்படுத்துகிறார்கள். மிகவும் குறைந்த நபர்கள் மட்டும்தான் ஆடுகளை காதணி விழாவிற்கு விருந்தாக படைக்கிறார்கள்.
எல்லோரும் ஆடி மாதத்திற்குள் காது குத்தாதவர்கள் காது குத்தி தடபுடலாக மக்களுக்கு சாப்பாடு போட்டு விட வேண்டும் என்கிற நோக்கத்தில் இந்த மாதம் முழுவது அங்கங்கு காது குத்து விழாக்கள் நடைபெறும்.
யாரெல்லாம் காது குத்துவார்கள்?
ஒரு குடும்பத்தில் இரண்டு பிள்ளைகள் பெற்றவர்கள் அல்லது அதற்கு மேற்பட்ட பிள்ளைகளை பற்றவர்கள் தங்களுக்கு இந்த பிள்ளைகளை போதும் என்று முடிவெடுத்த பிறகு அவர்களுக்கு இரண்டு வயதுக்கு மேல் ஆன பிறகு ஊரை எல்லாம் அழைத்து தடபுடலாக அசைவ உணவை பரிமாறி காதுக்குத்து விழா நடத்துவார்கள்.
வசதி வாய்ப்பு அதிகம் உள்ளவர்கள் குலதெய்வ கோவிலில் குழந்தைகளுடன் சேர்த்து பெற்றோர்களும் மொட்டை அடித்துவிட்டு பிறகு ஒரு பெரிய மண்டபத்தில் நிறைய பேரை அழைத்து வெகு சிறப்பாக இந்த விழாவை நடத்துவார்கள்.
வசதி வாய்ப்பில்லாதவர்கள் எளிமையாக காதணி விழாவை தங்கள் குலதெய்வ கோவிலில் தங்கள் குழந்தைகளுடன் தாங்களும் மொட்டை அடித்துக்கொண்டு தங்களுக்கு முக்கியமான, தெரிந்த, சில பல உறவுகளை மட்டும் அழைத்து குலதெய்வ கோவிலிலே காதணி விழா நடத்தி முடிப்பார்கள்.
ஆனால் எல்லோருமே ஆடி மாதத்தில் மட்டும் தான் காதுக் குத்துவார்கள். ஆடி மாதம் முடிந்து விட்டால் அதற்குப் பிறகு தங்கள் குழந்தைகளுக்கு யாருமே காது குத்த மாட்டார்கள். காது குத்தும் நிகழ்ச்சி ஆண், பெண் இரண்டு குழந்தைங்களுக்கும் சேர்த்து தான் நடைபெறும்.
ஆனால் வளர வளர பெண் குழந்தைகள் அந்த குத்திய காதுகளை பராமரித்து நகை போடும் அளவிற்கு காதை பக்குவப்படுத்துவார்கள். ஆனால் ஆண் குழந்தைகளை அப்படியே விட்டுவிடுவார்கள். அவர்களுக்கு குத்திய காதுகள் துருத்தி திரும்ப துளைகள் மூடிக்கொள்ளும்.
திருவண்ணாமலை உழவர் சந்தை நிலவரம் :
திருவண்ணாமலையில் மாவட்ட உழவர் சந்தையில் மட்டுமே நேற்று முன்தினம் 10 லட்சம் பேருக்கு மேல் வியாபாரம் நடைபெற்றதாக ஒட்டுமொத்த வியாபார சங்கத்தினர் கூறுகின்றனர். ஆடி மாதம் என்பதால் ஆடு கோழிகளின் விற்பனை அதிகரித்துள்ளது. இதனால் வியாபாரிகள் உட்பட விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.
உங்கள் பகுதியில் எந்த கோவில் சிறப்பாக மக்களால் கொண்டாடப்படுகிறது என்று நமது கருத்துப் பக்கத்தில் தெரிவிக்கவும். மேலும் பல நல்ல பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது வலைதள பக்கத்தில் பின்தொடரவும்.
நன்றி வணக்கம்!
0 கருத்துகள்